இயற்பியல் ஆய்வகம்

வசதிகள்

பேராவூரணியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நவீன இயற்பியல் ஆய்வகம் உள்ளது. இதில் அறிவியல் பயிலும் மாணவர்களின் இயற்பியல் ஆய்வுகளுக்குத் தேவையான கருவிகள் அனைத்தும் சிறப்பாகச் செயல்படுகின்றன.

சிறப்பம்சங்கள்

  • இயற்பியல் ஆய்வகம் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டுவதோடு செயல்திட்டங்கள் மூலம் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் வாய்ப்புகளை வழங்குகிறது.
  • சமுதாயத்திற்குத் தேவையான மற்றும் பயனளிக்கக்கூடிய பல்வேறு செயல்திட்டங்கள் அணு இயற்பியல், ஒளியியல், ஆற்றல் பாதுகாப்பு போன்ற துறைகளில் வழங்கப்பட்டு புதிய ஆய்வுகளை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • இந்த ஆய்வகம் மாணவர்களுக்கு சுதந்திரமாகச் செயலாற்ற வாய்ப்புகளை வழங்குவதோடு அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய கருவிகளையும் போதுமான இடவசதியையும் வழங்குகிறது. இயற்பியல் ஆய்வுகளுக்கு கணினியின் பங்கு இன்றியமையாதது என்பதால் கணினி ஆய்வக வசதியும் உள்ளது.